ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் இந்தியாவில் ஜனவரி 15-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய ஆக்டிவா ஸ்கூட்டரில் பி.எஸ்.6 ரக என்ஜின் வழங்கப்படுகிறது.இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவா மாடல் அதிகம் விற்பனையாகும் ஆட்டோமேடிக் ஸ்கூட்டர் மாடலாக இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் ஹோண்டா நிறுவனம் சுமார் 2.5 லட்சம் ஆக்டிவா யூனிட்களை விற்பனை செய்து வருகிறது.
புதிய ஸ்கூட்டரில் ஹோண்டா 12 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், ஆப்ஷனல் டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது.புதிய ஸ்கூட்டரில் 109.19சிசி HET ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் விற்பனையாகும் மாடலில் உள்ள பி.எஸ்.4 என்ஜின் 8 பி.ஹெச்.பி.
புதிய பி.எஸ்.6 என்ஜின் செயல்திறன் அளவுகளில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது.ஹோண்டா ஆக்டிவா 5ஜி மாடல் விலை ரூ.